Nushka

 Nushka

(Russian woman, 31 years old)
அவள் ரொம்ப சுட்டி. சின்ன வயசுலே கொஞ்சம் குறுக்கு புத்தினு கூட சொல்லலாம். ஒரு வயதான மனிதரை மயக்கி தன் வலைக்குள் விழ வைக்க தன்னை தயார் படுத்திக்குறா.
பன்னிரண்டு வயசுலே தன்னை விட வயதில மூத்தவரை மயக்கி அவரை காம இச்சைக்கும் உட்படுத்துறா. விவரம் தெரியா வயசு, கர்ப்பமா ஆகிடறா, அந்த மனிதர் அவரோட குடும்பத்த விட்டு இவளை ஏத்துக்க முடியாது. இப்ப அந்தப் பெண்ணோட வீட்டில் தெரிஞ்சு இவளை கர்ப்பத்தைக் கலைக்க கட்டாயப் படுத்தறாங்க.
அவ முடியாதுன்னு கர்ப்பத்தைச் சுமந்து குழந்தைக்கு தாயாகறா. படிப்படியா படிச்சு முன்னேறுறா. கூடவே அப்பாவோட வியாபாரத்த கத்துக்கறா. Business Managementle டாக்டர் பட்டம் வாங்கறா. International Tradele degree, pilot license nu பல துறைலே சிறந்து விளங்குறா. கல்யாணம் பண்ணிக்கற எண்ணமே இல்லை ஏன்னா அதுக்கு நேரமே இல்ல. Single Mother என்கிற பட்டத்தோட வாழ ஆரம்பிக்கிறா.
அப்பாவோட வியாபாரத்துக்காக நாடு நாடா சுத்தறா. பொருட்களை வாங்கி விக்கற டிரேடிங் தான் அது. உதாரணமா திங்கள் ஆர்மீனியா, செவ்வாய் ஈரான், புதன் ஏமன், வியாழன் சோமாலியானு சுத்துவா. மாதம் ஒருமுறை சீனா பயணம்.
அவளுக்கு இரண்டு அண்ணன்கள், ஒருத்தன் பைனான்ஸ் பாத்துக்கறான், இன்னொருத்தன் மிலிடரி ரிட்டயர்ட் அட்மினிஸ்ட்ரேஷன் பாத்துக்கறான். அக்கா ஒருத்தி ஊருக்கு வெளியே இவங்களோட பண்ணைய பாத்துக்கறா. அப்பா வயசானதாலே மேலோட்டமா வியபாரத்துலே ஈடுபடுறார்..
இந்தப் பெண்தான் வியாபாரத்த தன் தோள்லே சுமக்கறா. செக்யூரிட்டி ஆட்கள் மட்டும் தான் இவங்க ரோல்லே. மத்ததெல்லாமே கான்ட்ராக்டர்ங்க. ஒரு பெரிய நிறுவனமா இப்ப வளந்து இருக்கு.
இவளுக்கு காருங்கனா விருப்பம், அதனால் கார் கலெக்‌ஷன்ஸ் உண்டு. வரலாற்றுலே ஆர்வம் அதிகம் அதனால் ஊர் சுற்றல். பெரு ( தென்னமரிக்கா) நிலவுக் கோயில், எகிப்து பிரமிடுகள், சுமேரிய நாகரிகம், திபெத், இந்தியக் கோயில்கள்னு எல்லாத்தையும் சுத்திப் பாக்கறது மட.டுமல்ல. நினைவுச் சின்னங்கள் வாங்குறதும்.
காரை வேகமாக ஓட்டப் பிடிக்கும். பொழுது போக்கு விளையாட்டு ஒன்னுலே நடனமாடும் போது தான், அவைளப் பாத்தேன். கார்ட்டூன் உருவங்களா நடனமாடி பேசிக் கொள்ளும் விளையாட்டு, கற்பனை உலகம்.
வியந்து போனேன். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே. அவள் தொடாத உயரமில்லை. காதலை நினைத்துப் பார்க்கவும் நேரமில்லா உழைப்பு. குறைந்த செலவில் பெரிய வியாபார சாம்ராஜ்யம.
அவளோட பெண்ணுக் கும் இவளுக்கும் பதின்மூன்று வயசு வித்தியாசம். முப்பத்தோரு வயதில் பதினெட்டு வயசுலே மகள், திருமணம் ஆகாமலே.மகள் ஆர்மிலே சேந்து சிறப்பா செயல்படுறா. இவளை விட புத்திசாலி.
இந்த கருத்துப் பரிமாற்றம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் நடந்தபோது கனவுலகில் இருப்பது போன்றே உணர்வு.
வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பதத்திற்கு இப்பெண்மனியை விட வேறொரு உவமை தேவையா ?
இது ஒரு உண்மை நிகழ்வு

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்