விழித்திரு
மனித மனம் ஒரு புதையல்
இனிது தேடி அலைதல் இயல்பு
கனவு பலவும் உலவும் ஆலயம்
கற்பனை ஊற்று காலம் கடந்தது
வாழ்க்கைச் சக்கரம் சுழல்வது தொடரும்
வசப்பட வைப்பது நம்மிடம் உள்ளது
கசப்பினை மறந்து கன்னலை சுவைக்க
உறுதியை நிறுத்தி உள்ளத்தை செதுக்கினால்
உனக்கென பாதையை உருவாக்கி பயணிக்கலாம்
கணக்கிலா செயல்கள் கண்ணுக்கு அருகினில்
இணக்கம் இருப்பின் தேர்வது உன்னிடம்
தொலைவில் இருப்பதும் அருகினில் வந்திடும்
தொல்லைகள் களைந்து தொடர்வதும் சாத்தியம்
விடைகள் தேடியே விடியாத இரவுகள்
விடிவெள்ளி கண்டதும் சிவந்திடும் கீழ்திசை
விழித்திரு தொடர்ந்திடு வசப்படும் வாழ்க்கை
விதியென வீணே முடங்கிடல் வேண்டாம்
Comments
Post a Comment