தெளிவு தோன்றுமா ?
காளை பூட்டிய ஏரால் உழுத நாட்கள் சிறப்போ
கால்சராய் அணியாத கோவணமும் வெற்று உடம்பும் சிறப்போ
கற்றது கண்டது காதினில் கேட்டது எல்லாமே சிறப்போ
பெற்றது பெரிதாய் நோய்கள் பலவும் வாழ்வினில் சிறப்போ
ஆயிரம் அறிவுரை ஆரோக்ய வாழ்விற்கு வகை வகையாய்
சோதனை போலே கூடவே வேதனை தரும் நோய்களும்
சோதித்துப் பார்க்க நேரமும் இல்லை உயிரின் பயம்
மாற்றங்கள் அனைத்தும் நல்லதா கெட்டதா பாப்பையா பட்டிமன்றம்
சீற்றங்கள் கூட புதிதாய் ஆங்காங்கே புரட்டிப் போட்டுவிட
குழப்பம் மனதில் கேள்விகள் ஆயிரம் விடைகளும் பலவாய்
குடிப்பதில் சிறந்தது ஊரணி நீரா கேள்வி மனதில்
கூட்டிக் கழித்து விடைதேடி வாழ்க்கை ஏடுகள் புத்தகமாய்
கூடுவிட்டு ஆவி போகும் முன்னே தெளிவு தோன்றுமா ?
Comments
Post a Comment