சிலுவையில் மறைந்தான்

 விண்ணிலிருந்த நட்சத்திரங்கள் வீடுகளில் தொங்கின

பண்ணிசைத்துப் பாடல்கள் திக்கெட்டும் முழங்கின
கண்விழித்து நண்பர்கள் கடவுளைத் தொழுதனர்
கணக்கற்ற மாதாகோவில்கள் விளக்கொளியில் மின்னின
வண்ணமலர்கள் வாணவேடிக்கை பச்சை மரங்கள்
வகைவகையாய் பலூன்கள் ஒளிரூட்டும் மெழுகுவர்த்திகள்
இறைவன் பிறந்தான் மனித வடிவில்
கறைகள் சுமந்து சிலுவையில் மறைந்தான்
உலக மக்கள் துயரம் போக்கிட
உயிர்த்து வருவான் என்றே காத்திருப்பேன்

Comments

Popular posts from this blog

மதமென்ற மதம்

விழித்திரு