பாக்கெட்லே தண்ணி

 அண்ணன் கட்டுரை படிச்சப்ப சில வருஷங்களுக்கு முன்னாடி பீச் மணல்லே அங்கங்கே வித்துகிட்டிருந்த தண்ணி வியாபாரம் ஞாபகம் வருது.

பாட்டில்ல விக்கிற தண்ணிலாம் வராத காலம். தொண்ணூறுகள்ளே ஜூ எதிர்லே 25 காசுக்கு டீம் கம்பெனி பாக்கெட்லே தண்ணி வித்தப்ப ஆச்சரியமா பாப்போம்.
கடற்கரை மண்ணுலே அங்கங்கே சுமார் மூணு அடி ஆழத்துக்கு தோண்டி அதில வர ஊத்து தண்ணிய கிளாசுக்கு அஞ்சு காசுணு விக்கற பல இடங்க இருக்கும். உப்பா இருக்கும் கடல் தண்ணி இங்கே உப்பில்லாத குடிக்கற தண்ணியா எப்படி மாறுதுனு கேள்விக்கு பதில் தெரியாது.
பல வருடங்கள் இந்தக் கடைங்க இருந்தது. பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு இங்கே ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சு 23சி பஸ்ஸ புடிச்சு கெல்லீஸ்லேயோ 24 பஸ் புடிச்சு டெய்லர்ஸ் ரோடுலேயோ இறங்கி பொடி நடையா வீட்டுக்குப் போவோம்.
அப்ப அடிக்கடி பீச் போறது தான் பொழுது போக்கு, அண்ணா சமாதிக்குப் பின்னாடி அலைகள்ளே இருந்து விலகி மணல்தான் எப்பவும் உக்காருற இடம்.
திண்ணை பேச்சு மாதிரி எல்லா சப்ஜெக்டும் அங்க விவாதிக்கப்படும், அந்தோணி, சம்பந்தம்,அசோக், இஸ்மாயில் இவங்களோட.

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்