மதமென்ற மதம்

 என்றோ விதைத்த தவறான விதை

இன்று ஆலமரமாய் வளர்ந்து பெரிதாகி
கொன்று புதைத்தாலும் மீண்டும் மீண்டும்
நன்று இதுவன்று சொல்வதைக் கேட்பாரில்லை
என்று மாறிடும் என்ற கேள்வி
தொன்று தொட்டே உண்டு மனதில்
பன்றி சாக்கடையைத் தேடியே போவதுபோல்
வென்று வரும் நாளும் உண்டோ
மதமென்ற மதம் பிடித்த உள்ளங்கள்
இதமாய் வார்த்தைகள் இவரிடம் இல்லை
நிதமும் சாதியைத் தலையில் தூக்கி
பேதங்கள் பேசித் திரிவர் பேய்க்குணமே
வாதங்கள் வளர்ந்து வழக்காடி தொடர்வர்
முடிவுரை எழுத முடியாத பெருந்தொடராய்
விடிவே இல்லாத இரவுகள் தொடர்கதையாய்

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்