வென்றவன் வருணன்

 கதிரவன் கருமேகப் போரில் தோற்றானோ பகலவன்

கதிரொளி கண்டு நாட்கள் பலவாகிப் போனது
மேகத் தேரில் ஏறி ஊரெங்கும் பவனி
வாகை சூடியது அவனே கடல்போல வெள்ளம்
கோரத் தாண்டவம் ஆடியும் கோபம் குறையவில்லை
வாரம் ஒன்றாய் வளைத்துப் போட்ட ஊர்கள்
தோற்றவன் ஆதவன் வென்றவன் வருணன் அன்றோ
போற்றுதல் கூடாது அழிவைத் தந்து நகைப்பா
போதுமப்பா உமது பகைமை பாவமிந்த மனிதர்
தூதுவராய் நிலாவை அனுப்பி உள்ளோம் உம்மிடம்
அமைதி காத்து அன்பும் சேர்ந்து வாழ்வீர்
அவரவர் கடமை ஆற்றி உலகம் உய்யட்டும்

Comments

Popular posts from this blog

மதமென்ற மதம்

சிலுவையில் மறைந்தான்

விழித்திரு