பாப்பா பாட்டு

 அழகாய்ச் சிரிக்க பாப்பா பாட்டு

மழலை பேசும் குழந்தைப் பாட்டு
கண்ணைச் சிமிட்டி உதட்டைப் பிதுக்கி
பண்ணும் சேட்டை பார்த்துப் பாட்டு
இங்கும் அங்கும் உற்றுப் பார்க்கும்
இரண்டு கைகளும் உயர்த்திக் காட்டும்
சிரிக்கும் முறைக்கும் காரணமின்றி அழும்
புரியாத மொழியில் பேசிச் சிரிக்கும்
தவழும் நான்கு கால்களில் நடக்கும்
தத்தி நடைபோடும் வண்ணம் தேடும்
வளரும் பருவத்தில் கண்ணுறவே அழகு
வளராதே பாப்பா இப்படியே இருப்பாய்
தினமும் நாங்கள் உன்னோடு விளையாட

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்