தினமும் விடியல்

 பெங்களூரு குளிர் எழுப்பிய காலை

காக்கையும் புறாவும் சேர்ந்த கூப்பிடும் சத்தம்
இளமை வெயில் குளித்த கட்டிடங்கள்
மீண்டும் வார இறுதி வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு அறிவிப்பு
இந்த சுதந்திரப் போராட்டம் இயற்கையை எதிர்த்து
நாட்கள் மாதங்களாய் வருடங்களாய் தொடர்ந்து
மரண பயத்தில் பல உள்ளங்கள்
முடிவே இல்லாத தொடர்கதையாய்
உண்மைகள் திரிக்கப்பட்டு ஊடகங்களில் வைரசை விட வேகமாய் பரவிக் கொண்டு
எவன் விதைத்த விதையென்று தெரியாத புதிர்
பணப்பேய்கள் ஆரவாரமாய் நடனமாடும் செய்திகள்
உலகத்தை ஆட்டிப் படைக்கும் மாய சக்திகள்
விடை காணாமலே தினமும் விடியல்
தொடர்கதையாய்

Comments

Popular posts from this blog

சிலுவையில் மறைந்தான்

மதமென்ற மதம்

விழித்திரு