பழைய நினைவுகள்

 ஊரெங்கும் வண்ணக் கோலம் அதன் நடுவே பூசணிப்பூ

உடல் நடுங்கும் குளிரினிலும் ஊராரின் பஜனைப் பாட்டு
ஊர்க்கோடி கம்பத்தில் உரக்கப் பாடும் சாமிப்பாட்டு
நீராடி தலையைச் சுற்றி தலைப் பாகைப் பெண்கள்
வண்ணக் கோலமுடன் வண்ண வண்ண பறவைகள் போல்
ஆலயமணி ஓசை ஓயாமல் ஊடே ஒலிக்கும் சத்தம்
கூடவே பால்காரன் சைக்கிள் மணி வீதி தோறும்
குளிரென்றும் பாராமல் கிணற்றில் குதித்து நீராடும் சிறுவர்
தெருக்கோடி டீக்கடையில் சூடான பால் கொதித்து தேநீராகும்
பழைய நினைவுகள் தான் மறந்த நாட்களாய் அசைபோட

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்