நல்லுறவு

 நல்லுறவு நட்புறவு நல்வரவு நம்மிடையே

சொல்லிலே செயலிலே ஒட்டுறவு ஒப்பில்லாதது
எண்ணிலா உறவிலே உன்னத உறவிது
என்னையும் உன்னையும் இணைத்திடும் பாலமிது
எங்கேயோ தொடங்கி எப்படியோ வளர்ந்து
பங்காளிச் சண்டையும் பலவிதக் கருத்தும்
இன்றும் என்றும் தொடரும் கதையாய்
ஊன்று கோலாய் உதவும் கரமாய்
வளரும் வாழும் குனியும் நிமிரும்
குரங்காய் தாவும் மானாய் துள்ளும்

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்