புத்தாண்டு

 வந்தது புத்தாண்டு வளம்பெற்று வாழ்கவே

சொந்தமும் பந்தமும் சேர்ந்தே வாழ்கவே
நன்மைகள் பெருகிட நானிலம் வாழ்கவே
நல்லவர் தலைமையில் நாட்டினர் வாழ்கவே
கற்றவர் முன்னிலை பெற்றே வாழ்கவே
பெற்றவர் பெருமை பெற்றிட வாழ்கவே
சுற்றமும் நட்பும் சூழ்ந்திட வாழ்கவே
அற்றவர் வறுமை போக்கியே வாழ்கவே
வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை ஓங்கவே
நற்றமிழ் பாக்கள் என்றும் வாழ்கவே

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்