எங்கள் காலனி

 காலையிலே எழுந்து கீழ்பாக்கம் நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிரில், நியூ ஆவடி ரோட் சந்திப்பில் உடற்பயிற்சி மைதானத்தில் தண்டால்,புல் அப்ஸ், பேரலல் பாரில் உடம்பை ஏற்ற முயற்சித்த நாட்கள். அந்தோணி உடம்பைப் பார்த்து பொறாமைப் பட்டதுண்டு. பல நடிகைகளின் உதவியாளர்களும் பயிற்சி செய்வர்.

எங்கள் காலனி சுற்றி சினிமா சம்பந்தமான விசயங்கள். நியூடோன் ஸ்டுடியோ, சிட்டாடல் ஸ்டூடியோ,டைரக்டர் ஸ்ரீதர் வீடு, தேவி தியேட்டர் ஓனர் வீடுன்னு. சோ வின் ஆரம்ப காலம் அது. எங்கள் காலனி வழியாக அவர் நடந்து செல்வார், சிறுவர்கள் பலரும் முண்டைக்கண் என கேளி செய்வர். அலை ஓசை பத்திரிக்கை ஆபிஸை கொளுத்தியது அருகிலே.
ஐந்து லட்சம் என்ற சினிமா ஷூட்டிங் நடந்தபோது குட்டி பத்மினி மீது ஆசைப்பட்டதும் உண்டு. விஜயகுமார், மஞ்சுளா வீடு எங்கள் காலனிக்கு நேர் எதிரில்.
அந்தோணி சில காலம் சத்யா ஸடூடியோவில் டைம் கீப்பராக இருந்த போது நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் பகிர்வான். தெரிந்தே விளக்கில் விழும் விட்டில் பூச்சி போன்ற பெண்களின் கதைகளும் உண்டு. எம்ஜிஆர் நடித்த நவரத்னம் சூட்டிங்கை மறைந்து பார்த்த அனுபவமும் உண்டு. சுரேஷூம் எங்களோடு வந்ததாக நினைவு. எனது நண்பர்கள் கல்லூரி ஹாஸ்டலுக்கு கந்தசாமி, சுரேஷ் அறைகளுக்கு வந்து போவார்கள்.
ஈகா தியேட்டர் பின்புறம் இருக்கும் எங்கள் காலனியிலிருந்து ஆரம்பித்து செனாய்நகர் திருவிக பார்க், அண்ணாநகர் வழியாக ஓட்டப் பயிற்சி சென்றதும் உண்டு. அன்றிலிருந்தே அந்தோணிதான் உடற்பயிற்சி ட்ரெயினர் எங்களுக்கு. மாதமொரு முறையாவது தவறாமல் கடற்கரை சென்று கடலை போடுவதும் நடந்தது.
பழைய நினைவுகள் வலம் வந்து கொண்டே இருக்கும்.

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்