மெல்ல நட தாயே

 மெல்ல நட தாயே

சின்னப் பாதம் நோகாம
கன்னக் குழிவிழ சிரிப்பாயே
செல்லப் பாப்பாவே செங்கரும்பே
****
உப்புமூட்டை தூக்கும் தொழிலாளியின்
வியர்வை உப்புக் கரித்தது
****
இரவுக்கு விடை கொடுக்க
கதிரவக் காவலாளி வந்தான்
****
அலை மகள் கரையோரம்
மணல் காதலனை முத்தமிட்டாள்
****
மேகப் போர்வை விலக்கி
நிலவுப் பெண் சிரித்தாள்

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்