குரங்காய் தாவுது

 மனசெல்லாம் மத்தாப்பூ குரங்காய் தாவுது இங்கும் அங்கும்

மலையேறுது மனம் மாறுது உருமாறி உலகம் சுற்றுது
கடல் மேலே அலை மேலே ஆடிப் பாடுது
உடல் விட்டு ஆவியாகி மலை மேலே தாவுது
சிகரம் தொட்டு மரங்களில் தாவி பள்ளத்தில் பாயுது
சிலநேரம் ஆற்றோடு ஓடோடி கரை சேரப் பாக்குது
கணநேரம் காற்றாகி கண்டம் விட்டு கண்டம் தாவுது
கண்மூடி கண்சிமிட்டி நட்சத்திர உலகில் நடனம் ஆடுது
பூமியைத் துளைத்து ஆழச் சென்று நெருப்போடு விளையாடுது
பூட்டுப் போட்டு அடக்க நினைத்தால் வேகம் கூடுது
சுத்தவெளி எதுவென்று தெரியாமல் விண்ணில் சுற்றி வருது
நித்தம் இதன் தொல்லை கட்டுக்குள் அடங்க மறுக்கிறது

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்