பொங்கல்

 பொங்கலோ பொங்கலென்று உரக்கச் சொல்லிடுவோம்

நீங்களும் நானும் சேர்ந்தே பொங்கிடுவோம்
புத்தாடை உடுத்தி புதுப்பானை பொங்கல்
சத்தான கரும்பும் மஞ்சளும் கூடவே
அத்தானும் அம்மாவும் அழகுச் செல்வங்களும்
அருகினிலே இருக்க கொண்டாடி மகிழ்வோம்
மஞ்சளும் மாவிலையும் காய்கனியும் படையலிட்டு
கதிரறுத்த புத்தரிசிப் பொங்கலும் இலையிலிட்டு
கற்பூர ஆரத்தி எடுத்தே வணங்கிடுவோம்
இயற்கை இறைவனாய் காளை கடவுளாய்
இதயத்தில் இருத்திப் போற்றி மகிழ்வோம்

Comments

Popular posts from this blog

சிலுவையில் மறைந்தான்

மதமென்ற மதம்

விழித்திரு