வாழ்க்கை

 எங்கோ தொடங்கி எங்கோ முடியும்

எத்தனை வளைவுகள் நெளிவுகள் பாதையில்
முட்களை விலக்கி நடக்கப் பயிலும்
முதுகை வளைக்காத நீண்ட பயணம்
சிறுநடை வளர சீறிய ஓட்டம்
பெறுவது எதுவோ அவரவர் விதிப்பயன்
சக்கரச் சுழற்சி நிற்பதே இல்லை
பூக்கள் தூவிய பாதை முடிவுவரை
கற்றலும் கேட்டலும் காண்பதும் அனுபவம்
ஓடுதளம் பலவும் வெற்றிக் கோடுகளும்
பாடுபடுதல் பாட்டாளி மக்கள் பலவகை
உயரம் தொடுவது ஒருசிலர் மட்டுமே
துயரம் உவகை மாறிமாறி வந்திடும்
தோன்றுவது ஒருநாள் மறைவது இயற்கை
ஊன்றுகோல் தேடும் நாள்வரை வாழ்க்கை

Comments

Popular posts from this blog

சிலுவையில் மறைந்தான்

மதமென்ற மதம்

விழித்திரு