சொல்ல மறந்த கதைகள்
மெல்ல நடத்து வந்து மெதுவாக தொட்டுப்போ
சொல்ல மறந்த கதைகள் சொல்லி விட்டுப்போ
கள்ளம் கபடமற்ற சிரிப் பொன்றைத் தந்துபோ
உள்ளம் திறந் தென்னை உச்சி முகர்ந்துபோ
ஓடாதே நின்றேசெல் ஓய்ந்தன என் கால்கள்
பாடாத பாட்டெல்லாம் பாடிக் களித்த நாட்கள்
பாசப் பிணைப்பிலே கட்டுண்ட எண்ணற்ற தருணங்கள்
மறந்து போகவில்லை மறுபடி மனதில் வந்தமர்ந்து
உறக்கம் மறுத்து உள்ளத்தே நடனமடாடி நின்றதுவே
ஆயிரம் கதைகள் அத்தனையும் காவியம் போல்
ஆனதடி ஆரணங்கே போனதெங்கே சொல்வாயா இன்றேனும்
தேடிவரக் காத்திருக்கேன் தெற்குத் திசை தானா
ஓடிவந்து எனை யணைத்துக் கொள்வாயா சொல்
Comments
Post a Comment