உண்மைகள் பேசு

 மாறாத மனித மனம் ஏனோ

தேறாத எண்ணங்கள் தெளிவற்ற மனநிலை
ஏறாத மலைக்கு ஏழெட்டுப் பாதை
கூறாதே பொய்யை கூறுகெட்ட மனிதா
ஆறாதே புண்ணும் ஆழப் பதித்தது
யாராலே வந்தது நீயுண்ணும் உணவு
பாராமலே இருந்து பலநூறு உயிரும்
பரலோகம் போனதே பாவங்கள் யாருக்கு
செய்வதை நேரத்தே செய்தலே முறையாகும்
பொய்களை விடுத்து உண்மைகள் பேசு
சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்கட்டும்
வெல்லும் அன்றே உனது கொள்கை

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்