நரை முடி இளைஞர்கள்
நரை முடி இளைஞர்கள்
பயணிக்கனும்னு நினைச்சுட்டா என் பேச்சை நானே கேக்கறதில்லே. இந்த தடவை ஆந்திரா பக்கம் போகலாம்னு இரண்டு இடம் தேர்வு செஞ்சாச்சு. தனியாகவா நணபர்களோடவானு டாஸ் போட்டு, பால்ய சினேகிதர்கள் அசோக், ராஜேந்திரன் வருவதாக முடிவானது. சென்னையிலிருந்து ராஜி, திமலையிலிருந்து அசோக்.
பெல்லாரி ரோடை அடைந்து ஏர்போர்ட் கடந்து பயணித்து ஒரு தாபாவில் மத்திய உணவருந்த நிறுத்தம். ரோட்டிகளும் முட்டை மசாலாவும் உள்ளே போனதும் மீண்டும் பயணம். சுமார் 290 கிமீ பயணம். கூகுள் அண்ணா வழிகாட்டி. தேசிய நெடுஞ்சாலை, ஸ்டேட் நெடுஞ்சாலைனு பயணம் தொடர்ந்தது. இருட்டறதுக்குள்ளே போயிடலாம்னு தப்புக்கணக்கு வேற. பாய்லர் டீ தேடி பல கிமீ பள்ளம் மேடான ரோடுகள்ளே பயணிச்சு, கிருஷ்ணாபட்டினம் நெடுஞ்சாலைப் பிரிவுலே விதவிதமான டீ சுவையோட கடைலே இஞ்சி டீ அருமையா கிடைச்சது. வோடபோனும் ஏர்டெல்லும் வேலை செய்ய மறுக்க ஜியோ அண்ணா காப்பாற்றினார், அவரில்லாமல் பயணமே தடைப்பட்டிருக்கும்.
டீக்கடைக்காரிடம் வழி கேட்டு கடைசி முப்பது கிமீ ரோட்டுலே பயணம். இரவு நேரப் பயணத்துக்கு ஏற்றுக் போல ரிப்ளெக்டர்கள் வச்சு அருமையான சாலை. கடினமான ஒரு சாலைக்கு அப்புறம் அழகான சாலை. ஒரு வழியா கண்டிகோட்டா (Gandikota) அடைஞ்சப்ப எட்டு மணியாகி விட்டது.
டெண்ட் இருக்கிற இடம் ஒரே இருட்டா, கழிவறை வசதி இல்லாம, வேற இடம் வேணும்னு சண்டை போட்டு புக் பண்ண அசோக் என்பவரிடம் வேறொரு ஏசி அறையில் இடம் கிடைச்சது. பேக்கேஜ் சாப்பாடோடே. சிக்கன் குழம்பு, சாதம் ஆறு பேர் சாப்பிடலாம் போல. சாப்பிட்டு உரையாடி காலையில் சூரிய உதயம் பார்க்க ஆறு மணிக்குப் போவதென முடிவாயிற்று. பயணக் களைப்பில உறக்கம் தழுவியது.
( தொடரும்)
Comments
Post a Comment