மாற்றங்கள்
வருமென்று விழிவைத்துக் காத்திருந்தேன் நானும்
வழிநெடுக நினைவலைகள் மனதிலே அலைபாய
பிறப்பினிலே இறப்பினிலே இருப்பதில்லை பிரிவு
பிறகெதற்கு இடையினிலே இச்செருகல் விடையில்லை
இரத்தம் நிறம் சிவப்பு மாற்றமில்லை
உடலின் உறுப்பு அனைத்தும் ஒன்றே
எங்கே தோன்றியது மதமும் சாதியும்
என்ற கேள்விக்கு விடையும் இல்லை
மாற்றங்கள் உலகில் அனுதினம் உண்டு
மாறிட மனித மனம் மறுப்பதேனோ ?
Comments
Post a Comment