கனவில் வந்தாள்
கனவில் வந்தாள் நேற்று அவள்
கன்னம் சிவக்க எனை நோக்கி
சின்னப் புன்னகை உதட்டின் ஓரம்
சிங்காரி சேலை கட்டி பூச்சூடி
நீண்ட கூந்தல் மணக்கும் மல்லி
மெல்லிய விரல்கள் மஞ்சள் பூச்சு
மெல்ல அடி எடுத்து என்னருகே
புன்னகை எனை நோக்கி கண்விரிய
என்ன நினைத்து வந்தாள் நானறியேன்
வந்தாள் அருகில் அமர்ந்து அணைத்தாள்
காந்தப் பார்வை ஒன்றை வீசினாள்
கண் விழித்துப் பார்க்க மனமில்லை
கண் மூடி நான் இருந்தேன்
குனிந்தாள் குவிந்த உதடு ஈரமுடன்
பனிக் காற்று சில்லென்று தழுவ
போர்வை தேடி உறக்கம் களைய
போனாளே அவள் மறைந்து போனாளே !
Comments
Post a Comment