அவனருளே
காற்று சுமந்த அன்பு கடல் கடந்தும் சேரும்
ஊற்று போன்ற காதல் கண்களில் உறைந்து நிற்கும்
நேற்று நடந்த நிகழ்வு நிழலாய் உள்ளம் அடையும்
பற்று அற்ற வாழ்வும் பாசம் என்பதை உணரும்
கற்று தேர்ந்த அறிவு கடைசி வரை தொடரும்
தொற்று நோய் போன்றதே உற்ற நட்பின் உறவும்
முற்றுப் பெறாது வாழ்க்கை முதுமைப் பருவம் இன்றி
நாற்று நட்ட வயலில் நெல் மணிகள் அழகே
போற்று இறைவனை தினமும் நல்வாழ்வு நல்கியது அவனருளே !
Comments
Post a Comment