மறுபடி பிறப்பின்

 மறுபடி பிறப்பின் எதுவாகப் பிறக்கலாம்

மனதிலே தோன்றிய வினாவுக்கு விடையெதுவோ
பறவையாய் பறந்து உலகை வலம்வரவா
பசும்புல்லாய் பரவி பனியில் நனையவா
பாயும் மானாய் குதித்தோடிச் செல்லவா
நாயும் நரியும் புலியும் நன்றா
காட்டு மரமாய் ஓங்கி வளரவா
கானக மயிலாய் தோகை விரிக்கவா
நதியாய் மாறி நாடெங்கும் சுற்றவா
விதியது உண்டெனில் எதுவாய் பிறப்பது
மதியினில் கேள்வி விடைதேடிச் சென்றது
மனதில் வந்தது இதற்குப் பதிலாய்
மனிதனாய் வேண்டாம் திருந்தாத பிறவி
மற்றதாய்ப் பிறந்தாலே வாழ்வினில் அமைதி
என்றொரு வாக்கு எங்கிருந்தோ வந்தது
எண்ணிப் பார்த்தேன் கூற்று சரிதானோ ?

Comments

Popular posts from this blog

சிலுவையில் மறைந்தான்

மதமென்ற மதம்

விழித்திரு