புள்ளிக் கோலங்கள்

 தெருவெங்கும் புள்ளிக் கோலங்கள்

வாயிலெங்கும் மாவிலைத் தோரணங்கள்
புத்தரிசி புதுப்பானை பொங்கல்
கரும்பு மஞ்சள் காய்கறிகள்
புத்தாடை உடுத்திய மக்கள்
பொங்கலோ பொங்கல் உரக்கச் சத்தம்
வண்ணம் பூசிய மாட்டின் கொம்பு
புதுப் பெண்ணாய் மாறிய கிராமத் தோற்றம்
நெற்கதிர்கள் அடுக்கிய களத்து மேடு
ஒலிபெருக்கியில் அலறும் வினாயகர் பாட்டு
முச்சந்தியில் தெருக்கூத்து மேடை
நாளைய தெருக்கூத்து நகல் இன்று
சிறுமியர் கால் கொலுசும் மாட்டின் சலங்கை சத்தமும்
நலம் விசாரிக்கும் உறவுப் பட்டாளம்
மலை உச்சியில் தோன்றி உயர்ந்த கதிரவன்
உலா வந்த கண்களின் காட்சிகள்

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்