குழப்பம் மனதில்
யாருக்கும் நேரமில்லை கேட்கவும் மனதில்லை
யாசகம் செய்துமிங்கே எதுவுமே மாறவில்லை
முடிவில்லாப் பயணமிது
மீள்வது கடினமே
கடிவாளம் இருந்தும் கட்டிலடங்கா ஓட்டம்
ஆடிய ஆட்டங்கள் அடங்கிடும் அந்நாள்
கண்கள் குருடாகின காதுகள் செவிடாகின
எண்ணங்கள் சுருங்கி ஏளனம் செய்தன
கற்றதும் கேட்டதும் காணாமல் போயின
வற்றிய குளமாய் அறிவும் மழுங்கியே
கடிகார முட்கள் பின்னோக்கி சுழன்றன
விடியாதா ஏக்கம் இரவுகள் நீண்டன
கணக்குப் புத்தகம் பெரிதாகிப் போனது
கனவுகள் நீண்டதாய் முடிவில்லா இருளில்
குழப்பம் மனதில் கற்பனைச் சிக்கல்
குறுகத் தரித்த கவிதை நெடியதாய்
Comments
Post a Comment