உண்மை உணருங்கள்
பாரதி கண்ட கனவுகள் நனவானதா
ஊரதில் உயற்சி தாழ்வு மறைந்ததா
உணவின்றி எவரும் இல்லையென்று ஆனதா
கணக்கற்ற சாதிகள் இல்லாமல் போனதா
கங்கையும் காவிரியும் இணைந்து ஓடுகிறதா
அச்சினில் வருவது அனைத்தும் உண்மையா
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு என்னானது
கற்றதும் கேட்டதும் கடைச் சரக்கா
பெற்ற அறிவை மறந்த மானிடமே
நற்றமிழ் அறிஞர் நவின்றது மறந்தீர்
வெற்று வார்த்தைகள் பேசியே வாழ்ந்தீர்
சொல்வதும் செய்வதும் நல்லதே ஆகட்டும்
வெல்வது அதுவென்றே உண்மை உணருங்கள்
Comments
Post a Comment