பழைய நினைப்புடா

 பழைய நினைப்புடா பேராண்டி மனசு துடிக்குது

பருவ காலத்து சேட்டை படம் ஓடுது
களத்து மேடு கம்மாக்
கரை கண்ணுலே
களித்துக் குளித்த கிணத்துத் தண்ணி குளிருலே
கம்பங் கொல்லை கரும்புத் தோட்ட மறைவு
கம்பை ஊணி மலைப் பாதைலே ஆட்டோட
கடலைக் காய் காராமணி விறால் மீனு
சுடச் சுட சுட்டுப் சாப்புட்ட நாட்கள்
காட்டுப் பாதைலே நாட்டுப் பாட்டு மெட்டு
சேட்டுப் பயல் தென்னை இளநீ சுவை
ஆடடுப் பால கறந்து வெல்ல தேநீர்
மாட்டை ஓட்டி கொட்டடி கட்டி கதைபேசி
சொட்டச் சட்ட மழையிலே நனைஞ்சு ஆட்டம்
கொட்டக் கொட்ட விழிச்சு பாத்த கூத்து
வளராம இருந்தா வயசே ஆகாம சுகம்தானே
தளராத கால்கள் தாவியோடி மரங்கள் ஏறி
சொல்லி மாளாதுடா பேராண்டி போனது திரும்பாது

Comments

Popular posts from this blog

சிலுவையில் மறைந்தான்

மதமென்ற மதம்

விழித்திரு