பெண்மயிலே

 தென்னைமரத் தோப்புக்குள்ளே தெம்மாங்கு பாட்டுப்பாடி

பின்னலிடை அசைந்தாட போறவளே பெண்மயிலே
என்னைக் கொஞ்சம் பாரடியே கண்ணாலே
சொன்ன சொல்லை மறந்தனையோ சிங்காரி
வண்ணச் சேலையிலே வடிவான சிலையோநீ
எண்ணமெலாம் நானிருக்க நாணமென்ன உனக்கு
மாமரக் குயில் பாட்டைப் பாடலியோ
தேமதுரத் தமிழோசை நாவினிலே காணலியே
கால்கொலுசு சத்தமென்ன தாளமிடும் நடையோ
பால்மனசுக் காரியே காரிகையே எங்கேநீ
கரும்புத் தோட்டத்திலே கன்னம் சிவந்தாயோ
கருங்கூந்தல் பின்னல் இடையாட நடந்தாயோ
சோளக் காட்டுக்குள்ளே போனவளே சின்னவளே
சோடிசேர நானும் வாரேன் நில்லடியே !

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்