கற்பனை
கற்பனை உலகமொன்றில் உள்நுழைந்தேன்
விற்பது அனைத்தும் புதுமை
நூற்பது நூலாடைகள் பட்டாடைகள்
நாற்புறம் பல்வகை கடைத்தெரு
கற்பது நடைமுறை விஞ்ஞானம்
வேற்றுமை எதிலும் இல்லை
ஒற்றுமை மனிதம் எங்கும்
எல்லைகள் இல்லை எங்கும்
சொல்லில் வன்மம் இல்லை
அனைத்தும் சமமாய் அன்பாய்
அவரவர் தேவைக்கு உழைப்பு
உயர்வு தாழ்வு எங்குமில்லை
உலகமனைத்தும் மதமற்றே கண்டேன்
இதமாய் மனதில் அமைதி
இதுவே வாழுமிடம் மகிழ்ந்தேன்
சத்தமொன்று கேட்டே விழித்தேன்
சாதிச் சண்டை தெருவினில்
Comments
Post a Comment