ஓடிப் போலாமா
ஓடிப் போலாமா ஊரெல்லாம் சுத்தலாமா
கூடிக் களிச்சு கும்மாளம் போடலாமா
ஏரிக்கரை மேலே ஏறிக் குதிப்போமா
ஏலேலோ பாட்டுப்பாடி ஏத்தம் இறைப்போமா
காட்டுக்குப் போயி மஞ்சம்புல் பறிப்போமா
மலையுச்சி போயி மச்சானை கூப்பிடுவோமா
தலைமேலே ஆட்டுக்குட்டி தூக்கிச் சுமப்போமா
மாமரத்து மேலேறி மாங்கா பறிப்போமா
மாமனோட வீட்டு கடலை கொறிப்போமா
ஆடுபுலி ஆட்டமாட அரசமரம் போவோமா
கூடுவிட்டு கூடுபாயும் கூத்தைப் பாப்போமா
வீடுவிட்டு நாடுநாடா சுத்தப் போவோமா
கூரையப் பாத்துக்கிட்டு எத்தனை நாளோ
ஊரைச் சுத்திப் பாப்போம் கிளம்புடா
Comments
Post a Comment