உலகின் சுழற்சி
ஒவ்வொரு நாளும் புலரும் காலை
ஒளிதரும் கதிரோன் விடியலின் வரவில்
கடமைகள் வாழ்வில் தினமும் தொடரும்
கடலின் அலைகள் ஓய்வது இல்லையே
உலகின் சுழற்சி உயிர்களின் தேவைக்கு
இனியவை இருக்க இன்னாத கொள்ளல்
கனியது இருக்க காயது உண்ணல்
மாற்றம் வருமெனில் மனிதம் வளரும்
சீற்றம் விடுத்து சிரித்துப் பழகிடு
தோழமை கொண்டு தோள்களைத் தழுவிடு
வாழவே மண்ணில் வளமுடன் வழியது
அழகிய வானில் ஆயிரம் தாரகை
பழகிடு நற்பண்பு பகைமை மறையும்
இயற்கை நோக்கிடு இதயம் மகிழும்
இறைவன் உன்னிலும் என்னிலும் உறைந்தே !
Comments
Post a Comment