எவையும் இனிமை

 வானம் மேலேறி வலம் வந்து

காலம் கணக்கின்றி் உலகம் சுற்றி
ஞாலம் பெரிதென்று உணர்ந்து திரும்பி
பாலம் மனித மனமா ஆராய்ந்து
கோலம் புள்ளியோடு வளைந்து நெளிந்து
மூலம் தெளிவற்ற சிந்தனை பிறக்க
நாலும் கற்றாலும் நாறும் பிரிவினைகள்
நாக்கு சுத்தமெலாம் போனதெங்கே நரனே
வேணும் மனதில் தெளிவே என்றும்
காணும் எவையும் இனிமையாய் உணர
எத்தனை காலம் வேண்டும் உனக்கு

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்