எத்திசை போனாயோ
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சிலே மோதுதடி
குத்தம் உனதில்லே குறுகுறு கண்ணும் குவிந்த உதடுமே
சத்தமில்லா தோட்டத்துலே சாயங்கால நேரத்துலே நாமிருந்த நாட்களது
கத்த நினைச்சாலும் உதடுகள மூடியது ஞாபகம் இருக்கா
முத்தங்க பரிமாறி மூச்சு முட்ட நின்ன கதைகேளு
மொத்த கதை சொல்ல ஒருபாட்டு போதாது பெண்ணே
சுத்த வச்சுப் போனவளே எங்கே நீ காணலியே
வத்திய ரத்தம் சுருங்கின தோலு நடையிலே தளர்வு
முத்திய உடம்பு ஆனாலும் உன் நினைப்பு போகலேடி
எத்திசை போனாயோ யோசிச்சு பெருமூச்சு உனைவந்து சேருமோ
எத்தனை நாட்கள் ஏங்கிக் காத்திருக்கேன் எனைவந்து சேர்வாயா
Comments
Post a Comment