காலத்தின் சுழற்சி

 கலவியின் களைப்பு காலையில் கலையும்

உலவிய காற்றில் காதலின் வாசம்
நிலவின் வானில் நிறையவே தாரகைகள்
புலர்ந்த போதிலே ஒன்றாய்ப் போனது
மலரின் வாசம் மறைந்து சுருங்கி
உலகின் நியதி உணர்த்தி நின்றது
பலவும் கற்றது உள்ளே உறங்கிற்று
நிலவும் அமைதி நிர்மல மனதில்
காலத்தின் சுழற்சி கடைசி வரையில்
பாலமான உறவுகள் கூடவே பயணம்
நலமான வாழ்வு என்றும் தொடரும்

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்