நாடுவது அமைதி
உறங்காத இரவுகள் உறைந்த நினைவுகள்
மறக்காத ஞாபகங்கள் மறைந்தே மனதிற்குள்
துறந்தும் மறந்தும் தொலைத்த நாட்களுமே
துயிலும் இறுதியி்லே இணைந்து புதைந்திடுமே
கசப்பும் இனிப்பும் கலந்த வாழ்வினிலே
காலச் சக்கரம் சுழன்றே இருக்கும்
கானல் நீராக கரடு முரடாக
ஓடுவது ஓடட்டும் ஆட்டம் முடிவுவரை
நாடுவது அமைதி ஒன்றே நல்மனதில்
கூடிவருமா கூக்குரல் எழுப்பிக் கேட்கிறேன்
கூடுவிட்டுப் போகுமுன்னே நிசப்தம் நிலவட்டும்
Comments
Post a Comment