தீபாவளி

 வண்ணத் தோரணம் வீதிகள் எங்கும்

வளைந்த கோடுகள் வலம்வரும் கோலங்கள்
சின்னஞ் சிறுசுகள் புத்தாடைப் பூக்களாய்
பின்னல் இட்டு பூக்களும் சூடியே
தெருவெங்கும் உற்சாகம் தீபங்கள் ஒளிரூட்ட
பருவமகளிர் பட்டாடை உடுத்தி மிளிர்ந்திட
பலவகை வெடிகளின் சத்தமும் ஒளியும்
உலகெலாம் ஓங்கி ஒளித்திட வந்ததே
தீபத் திருநாளாம் தீபாவளி இன்று
தீயவை போக்கி நல்லவை ஓங்கி
நானிலம் எங்கும் நன்மை பெருகிட
நாமெலாம் வேண்டுவோம் மகிழ்ச்சி பெருகட்டும் !

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்