நரை முடி இளைஞர்கள் பகுதி-2

நரை முடி இளைஞர்கள்
பகுதி-2
காலை ஆறு மணிக்கு ரெடியாகி, குளியல் பிறகு என முடிவெடுத்து, ஐந்து ரூபாயில் டீ குடித்து, Great Canyon of India என்ற இடத்தை அடைந்த போது வாவ் எனச் சொல்லத் தோன்றியது. நேற்றைய இரவு இருளில் ஒன்றும் தெரியலே. பரந்து விரிந்த பள்ளத்தாக்கு, மலையை இரண்டாகப் பிளந்த பென்னாறு ஆறு சுமார் நூறு அடி பள்ளத்தில் ரம்மியமாய் காட்சி அளித்தது.
மேகக் கூட்டத்திலிருந்து சூரியனார் சிவப்புப் பந்தாய் ஏழு மணியளவில் வெளி வந்தார்.்நெருப்புக் கோளத்தை வித விதமாய் நண்பர்களுடன் கிளிக்கி முடித்து, அருகிலுள்ள கோட்டைக்குப் பயணம். கோட்டைக்குள்ளே சார்மினாரும்,மசூதியும், கோயிலும் இருந்தன. மிகப் பழைய தோற்றத்துடன். தொல்பொருள் ஆணையம் வசமிருந்தாலும் பராமரிப்பில்லை.
அறைக்குத் திரும்பி குளித்து, தயாராய் இருந்த காலை உணவை முடித்து அறையைக் காலி செய்வதற்கு முன் மீண்டும் பள்ளத்தாக்கு சென்று, ராஜி மட்டும் கீழே சென்று படமெடுத்து வந்தான்.
மீண்டும் பயணம், சுமார் 70 கிமீ பேலம் குகைகளுக்கு (Belum Caves). அங்கே அடைந்த போது நண்பகல் கடந்து வெயில் சுட்டது. குகையை மலைகள் நடுவே கண்கள் தேடின. சுமார் 500 மீ நடந்து, நுழைவுச் சீட்டு பெற்று உள்ளே சென்றால் படிகள் கீழிறங்கின. ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அங்கே இருந்த அறிவுப்புப் பலகையில் 1800 களில் அயல்நாட்டினர் ஒருவரால் கண்டு பிடிக் கப் பட்டாலும் 25 வருடங்களுக்கு முன்பே மக்கள் பார்வைக்கு திறக்கப்பட.டுள்ளது.
பல்லாயிரம் வருடம் பழமையான பாறைகள் குடையப்பட்டது போல. மேற்கூரை உடைந்து விழாமல் இருக்க சிமெண்ட் கொண்டு பூசி இருந்தார்கள்.பாதை குறுகலாய், இருண்டு, ஆங்காங்கே ஒரு விளக்கு, ஒரு ஃபேன் என சிறு கூட்டங்களாய் மக்கள்.
தனியாகப் போவது ஆபத்து, பாதை மாறிப்போக வாய்ப்புண்டு, In / Out அங்கங்கே மார்க் பண்ணியிருந்தார்கள. பெரும்பாலும் போகும் வழியே வெளியே வரும் வழி, ஓரிடத்தில் போன வழி முட்டுச் சந்தில் முடிய மீண்டும் வர வேண்டியதாயிற்று. சில இடங்களில் ஈரமாய் சேறுபோல் கால் புதைந்தது. திரில்லிங், அட்வென்ச்சர், மனதில் பயம் நல்ல அனுபவம்.
போன பாதையில் உடலைக் குறுக்கி, தலையைக் குனிந்து, சில இடங்களில் தலை இடிபட்டு ஒரு வழியாக மேலே வந்து, வெண்ணிற புத்தர் சிலையில் போட்டோ எடுத்து, மதிய உணவு சாப்பிடும் போது மூன்று மணியாகி விட்டது.
பயணம் மீண்டும் தொடக்கம். கூகுள் அண்ணனைக் கேட்ட போது திருவண்ணாமலை 408 கிமீ என்றார். டீக்கடைக் காரர் தப்பாக 220 கிமீ எனச் சொல்லி இருந்தார். இரவு ஒன்பது மணிக்குள் எந்த ஊரை அடைகிறோமோ அங்கே தங்குவது என முடிவெடுத்து, சித்தூர் நுழையுமிடத்தில் ஓட்டலில் அறையெடுத்து, இரவு உணவுக்குப் பிறகு, மறுநாள் காலை அருகில் உள்ள காணிப் பாக்கம் பிள்ளையார் கோயில் போக முடிவெடுத்து உறங்கப் போனோம்.

( தொடரும்) 

Comments

Popular posts from this blog

விழித்திரு

தெளிவு தோன்றுமா ?

சிலுவையில் மறைந்தான்